News Just In

7/24/2024 02:09:00 PM

திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இடம்பெற்ற இரு வெவ்வேறு நிகழ்வுகளில் கிழக்கு மாகாண ஆளுநரும்,கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளரும் பிரதம அதிதிகளாக பங்கேற்பு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் இடம்பெற்ற போதைபொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கின் ஆரம்ப நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர்செந்தில் தொண்டமான் அவர்களும்கிழக்கு மாகாண மட்ட மேசைபந்தாட்ட போட்டியின் ஆரம்ப நிகழ்வினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில்

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்து (23) கொண்டனர் .

இரு நிகழ்வுகளுக்கும் வருகை தந்திருந்த பிரதம அதிதிகளை கல்லூரி அதிபர் அருட்சகோதரி நிரோஷா வரவேற்றார்.

இரு நிகழ்வுகளும் கல்லூரியின் இரு நுழைவாயில்களினூடாக வெவ்வேறாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments: