News Just In

7/21/2024 01:41:00 PM

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவிகளின் பெற்றோருடனான கலந்துரையாடல்



(அஸ்ஹர் இப்றாஹிம்)

பரீட்சைகளின் போது உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவிகளின் அடைவு மட்டத்தை அதிகரிப்பது சம்பந்தமாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவிகளின் பெற்றோருடனான கலந்துரையாடல் அண்மையில் கல்லூரி சேர் றாசிக் பரீட் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) அதிபர் ஏ.பி.நஸ்மியா சனூஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் 2026 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விஞ்ஞான, கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவிகளின் பெற்றோர்களும், உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கற்பிக்கும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்

No comments: