News Just In

7/21/2024 01:39:00 PM

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் பேருவளை இலங்கை வங்கி பெயர்ப்பலகை பலத்த சேதம்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
கடந்த சனிக்கிழமை (20) பிற்பகல் 1.00 மணியளவில் பேருவளை இலங்கை வங்கிக்கு முன்பாக சாரதிக்கு காரை கட்டுப்படுத்த முடியாமல் வங்கியின் பெயர் பலகையில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சனநடமாட்டம் குறைவான நேரத்தில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: