(எம்.எம்.றம்ஸீன்)
அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குபட்ட வொலிவேரியன் கிராமத்தில் பிரிவு 09 இன்று (21) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
32 வயதுடையசந்தேகநபர்றிஸ்விமுஹம்மட்அன்சார்தலைமறைவாகியுள்ளார்.
திருமணமான தனது மகளை விவாகரத்துச் செய்யத் தயாரான மருமகனுடன் ஏற்பட்ட முரண்பாடே கொலையில் முடிவடைந்துள்ளதாக அடிப்படை விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
அடிக்கடி இவ்விடயத்தினால் தனது மாமாவுடன் தகராறு செய்து வந்த மருமகன், போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திலும் இரு வேறு குற்றச்சாட்டிற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச்.டி.எம்.எல்.புத்திக வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன், அம்பாறையிலிருந்து வரவழைக்கப்பட்ட தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும், இச்சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகி மரணடைந்த 62 வயதுடய மீராசாயிப் சின்னராசா என்பவரின் சடலம் தற்போது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
No comments: