News Just In

7/23/2024 11:27:00 AM

பாடசாலை சமூகத்தால் தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களுக்கு பாற்சோறும்,தாகசாந்தியும் வழங்கி வைப்பு!




Asker Mim
(நிந்தவூர் செய்தியாளர்)

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு,தாந்தாமலை ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த மஹோட்சவம் நிறைவு பெறும் நிலையில் மட்டக்ளப்பில் பல பிரதேசங்களிலுமிருந்தும் பக்தர்கள் ஆலயத்திற்கு பாதையாத்திரையாகவும் வாகனங்களிலும் பயணித்து வருகின்றனர்.

ஆலயத்திற்கு செல்லும் பக்தர்களின் நலன்கருதி மட்டக்களப்பு மேற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் தலைமையில் ஆசிரியர்களும் மாணவர்களும் பாற் சோறு மற்றும் தாகசாந்தி என்பவற்றை வழங்கி(22) உதவினார்கள்.

No comments: