(எம்.எம்.றம்ஸீன்)
மட்டக்களப்பு குருக்கள் மடம் சிங்ஹ ரெஜிமன்ட் இராணுவ முகாம் கட்டளை அதிகாரி மேஜர் நிமால் பத்மஸ்ரீ இடமாறிச் செல்வதை யொட்டி புதிய காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயலில் அவரை கெளரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.எம்.பரீட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடந்த மூன்று வருடங்களாக குருக்கள் மடம் சிங்ஹ ரெஜிமன்ட் இராணுவ முகாம் கட்டளை அதிகாரியாக கடமையாற்றி இன நல்லுறவுக்காக பாடுபட்ட
மேஜர் நிமால் பத்மஸ்ரீ அவர்களின் சேவையை கெளரவித்து அவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தனர்.
இந்த நிகழ்வில் பள்ளிவாயல் இமாம் மெளலவி முஸ்தபா உட்பட பள்ளிவாயல் நிருவாகிகள் சமூக செயற்பாட்டாளர்கள் சமூக நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்
No comments: