(அஸ்ஹர் இப்றாஹிம்)
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியில் முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த முத்துஐயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஜெ. விதுசன் சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு தியகம விளையாட்டரங்கில் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டியின் ஒரு அங்கமான 18 வயது ஆண்களுக்கான 3000 மீற்றர் நெடுந்தூர ஓட்டப்போட்டியியை 9 நிமிடங்களில் கடந்து முதலாம் இடத்தை பெற்று தங்கப் பதக்கத்தினை சுவீகரித்து சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.
இவரது சாதனையைப் பாராட்டி பிரதேச வாசிகள் ஊர்வலமாக அழைத்துச் சென்று கெளரவப்படுத்தினார்கள்.
No comments: