(அஸ்ஹர் இப்றாஹிம்)
தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச மட்டத்திலான ஆசிய மல்யுத்த போட்டியில் கலந்துகொள்ள மட்டக்களப்பு, கல்லடி சிவானந்தா தேசிய கல்லூரி மாணவன் ஹரிபிரஷாத் மற்றும் பயிற்றுவிப்பாளர் திருச்செல்வம் ஆகியோர் தாய்லாந்து பயணமானார்கள்.
இவர் இருவரையும் வழியனுப்பி வைக்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் கல்லூரிக்கும் பெருமையினை பெற்றுத்தந்துள்ள ஹரிபிரஷாத் மற்றும் திரு.திருச்செல்வம் ஆகியோருக்கு கல்வி சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.
இப் போட்டிக்கு இலங்கையிலிருந்து செல்லும் ஒரோயொரு தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments: