News Just In

7/25/2024 07:22:00 PM

திருகோணமலை, காந்திபுர மக்களின் ஏழு தசாப்தகால ஏக்கம் - காணி உரிமையை பெற்றுக்கொடுத்த கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் -!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

திருகோணமலை, காந்திபுரத்தில 157 குடும்பங்கள் கடந்த ஏழு தசாப்தங்களா (70 வருடங்கள்) காணியுரிமைகளை இழந்து தற்காலிக குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த நிலையில் அவர்களுக்கு காணி உரிமையை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார்.

காந்திபுரம் மக்கள் கடந்ம 70 வருடங்களாக எதிர்நோக்கி வரும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவந்திருந்தார்.

காணி உரிமைகள் அற்ற இந்த 157 குடும்பங்களும் நம்பிக்கையிழந்து தற்காலிக இருப்பிடங்களில் வாழ்ந்து வருகின்றன.

இது தனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, முன்னுரிமை நடவடிக்கையாக நிரந்தர தீர்வை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்து தற்போது காணி உரிமையையும் பெற்றுக் கொடுத்துள்ளதாக ஆளுநர் செந்தில் தொண்டமான் கூறியுள்ளார்.

காணி உரிமை பெற்றுக்கொடுக்கும் இந்நிகழ்வில் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் மதிவாணன், முன்னாள் பிரதேச செயலாளர் தனேஸ்வரன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், இ.தொ.காவின் உப தலைவர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments: