
மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள பால் பொருட்கள் விற்பனை நிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது. மாவட்ட அரசாங்க அதிபர் ஜி.ஜி.முரளிதரன் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது.
ஜெகதீஸன் பால் பொருள் உற்பத்தி நிறுவனத்தினால் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஸினி சிறிக்காந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட செயலக ஊழியர்கள் மற்றும் மாவட்ட செயலகத்திற்கு வருகைதரும் பொதுமக்களின் நன்மை கருதி இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
No comments: