News Just In

7/28/2024 03:38:00 PM

சம்மாந்துறையில் இளைஞர், யுவதிகளுக்கான முதலுதவி,பாலியல் தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

சம்மாந்துறை அஸ்ஹரியன் இளைஞர் நட்புறவு அமைப்பின் ஏற்பாட்டில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் அவர்களின் வழிகாட்டலிலும் ஆலோசனையில் சம்மாந்துறை அல் அஸ்ஹர் வித்தியாலய மண்டபத்தில் இளைஞர்களுக்கான, முதலுதவி பயிற்சியும், பாலியல் தொற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வும்(27) நடாத்தப்பட்டது.

இந் நிகழ்வுகளை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் கபீர் நிகழ்வினை இணைப்புச் செய்ய வளவாளர்களாக டொக்டர்.ஐ.எல்.ஜலால்தீன்,டொக்டர் ஏ.எஸ்.எம்.பெளஸாத், டொக்டர் முஹம்மட் இர்ஸாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

160 இளைஞர், யுவதிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

No comments: