News Just In

7/28/2024 03:35:00 PM

கிழக்கு மாகாண மட்ட பூப்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்று கல்முனை ஸாஹிரா தேசிய மட்டத்திற்கு தெரிவு!

கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி 18 வயது ஆண்கள் கிழக்கு மாகாண மட்ட பூப்பந்தாட்ட (Badminton) போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவு


(அஸ்ஹர் இப்றாஹிம்)

திருகோணமலை மெக்கெய்ஸர் விளையாட்டரங்கில் (26,27,28) நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ( Eastern Province School Badminton Tournament ) போட்டியில் கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி வீரர்கள் மிகவும் சிறப்பான விளையாடி 18 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்று கிழக்கு மாகாணத்தில் தனக்கான அடையாளத்தை நிருபித்து தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இவ் அடைவிற்காக உறுதுனையாய் இருந்து மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி ஊக்கப்படுத்திய கல்லூரி முதல்வர் எம்.ஐ.ஜாபிர் அவர்களுக்கும் மற்றும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி சமூகம் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வழிப்படுத்திய பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர்களான ஏ.எம்.அப்ரார றிலா ,எம்.எச்.எம்.முஸ்தான்ஸிர் மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

No comments: