(அஸ்ஹர் இப்றாஹிம்)
கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் முன்மாதிரியான நிகழ்வு ஓட்டமாவடி பாத்திமா பாளிகா மகா வித்தியாலயத்தில் 2000ம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதிய மாணவிகளின் ஏற்பாட்டில் வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் 2000ம் ஆண்டு ஓட்டமாவடி பாத்திமா பாளிகா மகா வித்தியாலயத்திலிருந்து கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்குத் தோன்றிய அனைத்து மாணவிகளும் கலந்து கொண்டனர்.
இதன் போது தங்களுக்கு தரம் 1 தொடக்கம் 11 வரை கற்பித்த ஆசிரிய, ஆசிரியைகள் அனைவரும் கெளரவிக்கப்பட்டதோடு, மாணவிகளின் கவிதை, பாடல், பேச்சு எனப் பல்வேறு பல்வேறு நிகழ்ச்சிகளும் ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.
இதன் போது 2000ம் ஆண்டு சாதாரண தர மாணவிகளினால் ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு தொகைப்பணமும் பாடசாலையின் கல்வி அபிவிருத்திக்காக பிரதி அதிபர் ஏ.எல்.எம்.அஸ்கரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: