
மட்டக்களப்பு மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக நியமனம் பெற்று கடமையை பொறுப்பேற்றஜகத் விசாந்த இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனை சந்தித்து கலந்துரையாடினார்.நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீPகாந்த் கலந்து கொண்டார்.
கலந்துரையாடலின் போது மாவட்டத்தின் அபிவிருத்திவேலைத்திட்டங்களுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் இதன்போது அரசாங்க அதிபரிடம் புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி உதித் லியனகே குருநாகல் மாவட்டத்தில் சென்றுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய ஜகத் விசாந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: