News Just In

7/28/2024 08:51:00 PM

பேருவளையில் ஆரம்பிக்கப்பட்ட அமைதிக்கான நடைபயணம், மட்டக்களப்பு காத்தான்குடியை வந்தடைந்தது!





நாட்டில் சுபீட்சமும் நிரந்தர அமைதியும் வேண்டி, இளைஞரொருவர் பேருவளையிலிருந்து ஆரம்பித்துள்ள நடைபயணம் இன்று மட்டக்களப்பு காத்தான்குடியை வந்தடைந்தது.

ஸஹ்மி ஹமீட் எனும் இளைஞரே நாடளாவிய ரீதியான நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார். காத்தான்குடியை வந்தடைந்த இளைஞருக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. காத்தான்குடி அல் அக்ஸா ஜூம் ஆப் வாயிலுக்கு முன்பாக வைத்து மாலை அணிவித்து பள்ளிவாயல் நிர்வாகத்தினர்
அவருக்கு வரவேற்பளித்தனர் அல் அக்சா ஜும்ஆபா பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.எம். பரீட் பள்ளிவாயல் இமாம் மௌலவி முஸ்தபா உட்பட நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை நோக்கி நடைபயணம் செல்லவுள்ளது.

No comments: