
: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 225 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் நாளாக இன்று (புதன்கிழமை) நடைபெறும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முண்டக்கை பகுதியில் சிக்கிக் கொண்டு இரண்டு தங்கும் விடுதிகளில் தஞ்சம் புகுந்திருந்த 19 பேர் இன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சாலியாற்றில் 15 சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டன.
இதுவரை பலியானோர் எண்ணிக்கை 185, அவர்களில் 89 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது. 143 சடலங்களுக்கு உடற்கூராய்வு நிறைவுபெற்றுள்ளது. நிலச்சரிவில் மாயமானவர்கள் 225 பேர் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments: