(அஸ்ஹர் இப்றாஹிம்)
கடந்த 2024.07.25,26,27ஆம் திகதிகளில் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட பூப்பந்தாட்ட போட்டிகள் திருகோணமலை மெக்கெய்சர் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
இதில் பங்குபற்றிய நிந்தவூர் அல்- அஷ்ரக் தேசிய பாடசாலையின் 16 மற்றும் 20 வயது பிரிவு பூப்பந்தாட்ட அணிகள் இரண்டும் சம்பியன்களாகவும், 18 வயது பூப்பந்தாட்ட அணி மூன்றாம் இடத்தையும்வென்று வரலாற்றுச் சாதனையுடன் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
No comments: