
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு நகரில் நிறுவவுள்ள முதலாவது தொழில்நுட்ப பூங்கா தொடுமையத்தின் சாத்வீக அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் நேற்று மாலை நடைபெற்றது.
கலந்துரையாடலில் சாத்வீக அறிக்கை தொடர்பான துறைசார் பங்குதாரர்கள் மற்றும் தொழினுட்ப துறைசார் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
நிகழ்வானது கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றதோடு, துறைசார் பேராசிரியர்கள், துறைசார் அரச திணைக்கள அதிகாரிகள், தொழில் முயற்சியாளர்கள், துறைசார் வைத்தியர்கள் என பலரும்; கலந்துகொண்டனர்.
நவீன விவசாய தொழில்நுட்பம், நவீன தொழினுட்ப உற்பத்திகளை அதிகரித்தல், ஊக்குவித்தல், உற்பத்தியாளர்களை இனம் காணல், அவர்களின் அடிப்படைத் தொழினுட்ப தேவைகளை வழங்கல் போன்ற செயற்திட்டங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன
No comments: