News Just In

6/04/2024 10:06:00 AM

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு காரைதீவில் சிரமதானம்!



நூருல் ஹுதா உமர்

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு ஜூன் 03 சுற்றாடல் தூய்மைப்படுத்தல் தினம் என்பதற்கமைய காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் அன்றைய தினம் காரைதீவு பிரதேச செயலகம், காரைதீவு பிரதேச சபை, காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தினர், காரைதீவு பொலிஸ் நிலையம் மற்றும் பொதுமக்கள் சிறந்த ஒத்துழைப்போடு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது காரைதீவு-02, 03, 05 ம் பிரிவுகளின் தோணாவின் சூழலை தூய்மையாக்கப்பட்டதுடன் காரைதீவு-09 வெட்டு வாய்க்கால் முகத்துவாரப் பகுதியில் முறைகேடாக குப்பை கூழங்கள் கொட்டப்பட்டு மிகவும் மோசமான முறையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காணப்படும் இடத்தினை தூய்மையாக்கல் சிறந்த முறையில் இடம் பெற்றது.

இதன் போது காரைதீவு பிரதேச சபை ஆளணியினர் மற்றும் வாகன வசதிகள் வழங்கி இருந்ததுடன் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காரைதீவு பிரதேச சபை, காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தினர், காரைதீவு பொலிஸ் நிலைய பொலிஸார் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: