News Just In

6/02/2024 04:56:00 AM

வெளியான இந்திய தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழ் நாட்டிலும் தடம் பதிக்க காத்திருக்கும் மோடி தரப்பு!




இந்திய(India) மக்களவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்களிப்புகள்நேற்று  நிறைவடைந்ததையடுத்து வாக்களிப்புக்கு பின்னரான கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக தேர்தல் பிரசாரங்களின் அடிப்படையில் கருத்துக்கணிப்புக்கள் வெளியிட்ட நிலையில் தற்போது வாக்களிப்புக்கு பின்னரான கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தமிழ் நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகம்(DMK) 22 முதல் 25 தொகுதிகளிலும் இதன் தோழமைக்கட்சிகள் 6 முதல் 8 தொகுதிகளிலும் மற்றும் பாரதீய ஜனதாக்கட்சி(BJP) 1 முதல் 3 தொகுதிகளிலும் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 4ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி மொத்தமுள்ள 38 தொகுதிகளில் 37இல் வெற்றி பெற்றது.



அத்துடன், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் பாரதீய ஜனதாக் கூட்டணி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.

மேலும், இந்திய அளவில் வெளியான வாக்களிப்பின் பின்னரான கருத்துக்கணிப்புக்களின் படி, பாரதீய ஜனதா கூட்டணி, மீண்டும் 339 முதல் 347 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி, 159 முதல் 165 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் ஏனைய கட்சிகள் 35 முதல் 38 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் வாக்களிப்பின் பின்னரான கருத்துக்கணிப்புக்கள் கூறுகின்றன.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணி 353 தொகுகளிலும் காங்கிரஸ் கூட்டணி 91 தொகுதிகளிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: