
நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹீர் மௌலானா மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் ஆகியோரது நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு காத்தான்குடியிலுள்ள பாடசாலைகள் மற்றும் பொது நிறுவனங்களுக்கான உப கரணங்கள் தள பாடங்கள் இன்று வழங்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானாவின் நிதியொதுக்கீட்டிலிருந்து 7 நிறுவனங்களுக்கும், காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வின் நிதியொதுக்கீட்டில் 3 நிறுவனங்களுக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான அலி சாஹீர் மௌலானா மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் ஆகியோர் நேரில் உபகரணங்களை கையளித்தனர்.
நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய சிறீதர் உட்பட பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments: