News Just In

6/20/2024 05:32:00 AM

கடும் வெப்பம்: 550 ஹஜ் யாத்திரிகர்கள் மரணம்!





இம்முறை ஹஜ் கடமையில் கடும் வெப்பம் காரணமாக குறைந்தது 550 யாத்திரிகர்கள் மரணிதிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக 323 எகிப்து நாட்டவர்கள் வெப்பம் தொடர்பான பாதிப்பினால் உயிரிழந்திருப்பதாக இரு இராஜதந்திரிகள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளனர். குறைந்தது 60 ஜோர்தானியர்கள் உயிரிழந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல நாடுகளும் வெளியிட்ட உயிரிழப்பு எண்ணிக்கையின்படி இதுவரை மொத்தம் 577 பேர் உயிரிழந்திருப்பதாக ஏ.எப்.பி. வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்காவில் உள்ள மிகப்பெரிய பிரேத அறைகளில் ஒன்றான அல் முவய்சமில் மொத்தம் 550 உடல்கள் இருந்ததாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

வசதி படைத்த முஸ்லிம்கள் வாழ்நாளில் ஒருமுறை செய்ய வேண்டிய ஹஜ் கடமையில் கடுமையான வெப்ப பாதிப்புக் குறித்து சவூதி அரேபிய நிர்வாகம் ஒரு மாதத்திற்கு முன்னரே எச்சரித்திருந்தது.

மக்காவில் உள்ள பெரிய பள்ளிவாசலில் கடந்த திங்கட்கிழமை (17) 51.8 பாகை செல்சியஸ் வெப்பம் பதிவானதாக சவூதி அரேபிய வானிலை ஆய்வு மையம் கூறியது.

No comments: