News Just In

6/23/2024 11:14:00 AM

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 31 ஆவது பேராளர் மாநாட்டில் அமைதியின்மை!



 ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக ரவூப் ஹக்கீம் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 31 ஆவது பேராளர் மாநாடுநேற்று  (22) காத்தான்குடியில் நடைபெற்ற போதே இந்த தெரிவுகள் இடம்பெற்றன.

கட்சியின் பதவி நிலைகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பெயர்கள் மாநாட்டில் அறிவிக்கப்பட்டன.

கட்சியின் தலைவராக ரவூப் ஹக்கீமும் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலான, H.M.M.ஹரிஸ். M.L.A.M.ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட 7 பேர் உப தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இன்றைய மாநாட்டின் ஆரம்பத்தில் சம்மாந்துறையில் இருந்து சென்ற சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

மீண்டும் அவர்கள் மண்டபத்திற்குள் சென்றபோது அமைதியின்மை ஏற்பட்டது.​

முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் அமைதியின்மையை தோற்றுவித்த 3 பேர் கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கட்சியில் சிலருக்கு பதவி வழங்கியமை தொடர்பில் தாம் அதிருப்தியடைவதாகக் கூறி மேலும் சிலர் மண்டபத்தில் இருந்து வௌியேறினர்

No comments: