News Just In

5/03/2024 04:53:00 AM

சாணக்கியனின் ஐந்து கோடியை தடுப்பதற்கு பிள்ளையானின் நகர்வு!



கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது சிவநேசத்துரை சந்திரகாந்தன் எடுத்த 50ஆயிரம் வாக்குகளும் 8 பேர் இணைந்து எடுத்த வாக்குகள் ஆகும் என்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

ஊடகவியலாளரின்  கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் மக்கள் 2020ஆம் ஆண்டு எடுத்த ஒரு சில தவறான முடிவுகளின் காரணமாகத்தான் இவ்வாறானதொரு கஸ்ட்டமான நிலை இருக்கின்றது என சாணக்கியன் தெரிவித்தார்.

பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து சாணக்கியனுக்கு ஏன் ஐந்து கோடி ரூபா வழங்கினீர்கள் என்று அபிவிருத்திக் குழு கூட்டத்தின் தலைவராக இருக்கும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கடந்த வாரம் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கேள்வி எழுப்பியுள்ளார்.

நாங்கள் எல்லாம் மக்களுடைய பிரச்சினைகளுக்கே முன்னுரிமை கொடுத்து பேசுவோம். ஆனால் சாணக்கியனுக்கு கொடுக்கப்பட்ட நிதி தொடர்பில் தான் பிள்ளையான் பிரச்சினை எழுப்பியுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments: