News Just In

5/17/2024 11:20:00 AM

முள்ளிவாய்க்காய்காலில் சர்வதேச ஊடகங்களின் கண்காணிப்பு!




முள்ளிவாய்க்காய் கஞ்சி வழங்கப்படுவதை சர்வதேச ஊடகங்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மே மாதம் 18 ஆம் திகதி பொதுமக்கள் அழிப்பு தினமாக தமிழ் மக்கள் அனைவரும் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தி வருவது வழக்கமான செயற்பாடாக மாறியுள்ளது.

இந்நிலையில் மே மாதம் தொடங்கியதில் இருந்து மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்படுகின்றது. இதனை இம் முறை சர்வதேச ஊடகங்கள் நேரடியாக கண்காணித்து வருகின்றது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பொதுசந்தை கட்டடப்பதிக்கு அருகில் இன்று (16) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி வழங்க ஆயத்த வேலைகள் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த வேலைகளையும், முள்ளிவாய்க்கால் முக்கிய நினைவிடங்கள், தடய பொருட்களையும் சர்வதேச ஊடகத்தினரால்  இன்று நேரடியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது

No comments: