News Just In

5/17/2024 04:43:00 PM

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!




 முன்னாள் இராணுவத் தளபதியும் இராணுவப் படைகளின் பிரதானியுமான ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இன்று இணைந்து கொண்டார்.

ஓய்வுபெற்ற ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு சென்று சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்து கட்சியுடன் இணைந்துகொண்டார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துகொண்டதாக மகேஷ் சேனாநாயக்க இதன்போது தெரிவித்தார்.

இதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ முன்னணியின் தலைவராக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவரை நியமித்துள்ளார்.

சிரேஷ்ட இராணுவ அதிகாரியான மகேஷ் சேனாநாயக்க, 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி இராணுவப் படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.

லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று 2017 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி இராணுவத் தளபதியாக அவர் பதவியேற்றார்.

2019 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 21 ஆம் திகதி ஜெனரல் பதவிக்கு உயர்த்தப்பட்ட பின்னர், மகேஷ் சேனநாயக்க இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார்.

No comments: