News Just In

3/29/2024 07:18:00 PM

செங்கடலில் பதற்றம்: ஹவுதியின் தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி!




செங்கடலில் தொடரும் பதற்றத்திற்கு மத்தியில் ஹவுதி(houthi) கிளர்ச்சியாளர்களின் ஆளில்லாத 4 டிரோன்களை அமெரிக்க(america) படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பதற்காக நடந்து வரும் இஸ்ரேல் - பாலஸ்தீன(Israel -Palestine) மோதலில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்.

இதில் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் தான் அதிகம் என ஐநா தகவல் வெளியிட்டுள்ளது.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நோக்கி செல்லும் சரக்கு கப்பல்களை அவர்கள் குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனால் செங்கடல் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஹவுதி கிளர்ச்சி யாளர்கள் தாக்குதலை முறியடிக்க செங்கடல் பகுதியில் அமெரிக்கா தனது கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளது. அந்நாட்டு கடற்படை வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டில் இருந்து ஆளில்லாத 4 டிரோன்களை செங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை குறி வைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க படையினர் டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

No comments: