News Just In

2/28/2024 07:39:00 AM

STF உடனான பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தில் சந்தேகநபர் உயிரிழப்பு!





 பொலிஸ் விசேட அதிரடிப் படையினருடன்(STF) இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரொருவர் சூரியவெவ பகுதியில் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் வீடொன்றில் மறைந்துள்ளதாக நேற்றிரவு(27) தகவல் கிடைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதற்கமைய, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், சந்தேகநபரைக் கைது செய்வதற்காக அங்கு சென்றுள்ளனர்.

இதன்போது இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எல்பிட்டிய - வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஹபாகே பகுதியில் கடந்த 21 ஆம் திகதி ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை மற்றும் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெல்லம்பிட்டிய பகுதியில் ஒருவரை சுட்டுக் கொலை செய்தமை ஆகிய சம்பவங்களில் அவர் சந்தேகநபராகக் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

No comments: