News Just In

2/03/2024 07:46:00 PM

நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக வாகன விபத்து.!




(எஸ்.அஷ்ரப்கான்)

நான்கு இளைஞர்களுக்கு மத்தியில் இடம் பெற்ற ரேஸ் ஓட்டம் பாரிய விபத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது!

நிந்தவூர் வைத்தியசாலை வீதியிலிருந்து பிரதான வீதியினை நோக்கி காலை 07:00 மணியளவில் நான்கு இளைஞர்கள் இரு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற நிலையில்,வேகக்கட்டுப் பாட்டை இழந்து , ஜும்ஆ பள்ளிவாசல் முன்வாயல் சுவர் பகுதியில் மோதுன்டு, இரு இளைஞர்கள் பலத்த காயங்களுடன் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

இவ்விளைஞர்கள் நிந்தவூர் பிரதேசத்தினைச் சேர்ந்தவர்கள் என அறியக் கிடைத்துள்ளது.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: