News Just In

1/22/2024 04:36:00 PM

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியின் மகள் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திருட்டு!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் வீடு உடைக்கப்பட்டு சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்கள் திருடப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் வீட்டின் அலமாரியிலிருந்த 1,50,000 ரூபா மற்றும் தங்க முலாம் பூசப்பட்ட ஒட்டகச் சிலை, ஸ்மார்ட் வாட்ச், 8 தங்க முலாம் பூசப்பட்ட சிங்கப்பூர் நாணயங்கள், உணவுப் பொருட்கள் மற்றும் பள்ளி புத்தகப் பை ஆகியவை திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மைத்திரிபால மகளின் கணவர் கொழும்பில் உள்ள வீட்டுக்கு வந்தபோது, ​​வீடு திருடர்களால் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: