News Just In

1/28/2024 03:17:00 PM

இலங்கை கணக்காளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டவர் பாராட்டி கெளரவிப்பு!




நூருல் ஹுதா உமர்
இலங்கை கணக்காளர் சேவைக்கு (SLAcS) அண்மையில் தெரிவு செய்யப்பட்ட ஒரேயொரு முஸ்லிமான கல்முனையன்ஸ் போரத்தின் சிரேஷ்ட செயற்பாட்டாளர் எஸ்.எல்.எம். நிப்றாஸை கல்முனையன்ஸ் போரம் பாராட்டி கெளரவித்தது.

இலங்கை கணக்காளர் சேவை - தரம்lll இற்கு நேரடி ஆட்சேர்ப்பின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிப்றாஸை கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர்கள் நேற்று (27) வீடு தேடிச்சென்று பொன்னாடை போர்த்தி பாராட்டி கெளரவித்தனர்.

இவ் ஆட்சேர்ப்பில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரேயொரு முஸ்லிம் நபர் நிப்ராஸ் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கல்முனையன்ஸ் போரத்தின் ஸ்தாபகத்திலிருந்து தொடர்ந்து செயற்படும் நிப்றாஸ் சமூக சிந்தனையுடன் பல்வேறு பொது நல வேலைத்திட்டங்களிலும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர்.

ஒரு கணக்காளனாக நம் தேசத்திற்கும், நமது மண்ணுக்கும்சீரியதொண்டாற்ற கல்முனையன்ஸ் போரம் வாழ்த்தியுள்ளது.

No comments: