News Just In

1/22/2024 10:08:00 AM

தோல்வியை அடுத்து சுமந்திரன் வெளியிட்ட தகவல்!



சிறீதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசு தலைவர் பதவிக்கு போட்டியிட்டவருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்றைய தினம் (21.01.2024) இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் தோல்வியுற்றதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இன்றைய தினம் எமது தமிழரசுக் கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் முன்மாதிரியாக நிகழ்த்திக் காட்டி இருக்கின்றது.

இதில் வெற்றி பெற்ற சக வேட்பாளர் மற்றும் எனது நண்பன் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

No comments: