News Just In

1/24/2024 08:30:00 AM

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்: அடிப்படை சம்பளத்தில் மாற்றம்!


தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்த தொழில் அமைச்சினால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திறந்த மற்றும் பொறுப்பான அரசாங்கத்திற்கான துறைசார் மேற்பார்வைக் குழு கூடிய போது, ​​தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தனியார் துறை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தலைதூக்கியுள்ளதாக குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜகத் குமார சுமித்ராராச்சி தெரிவித்தார்.

தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவிலிருந்து 21,000 ரூபாவாக அதிகரிக்க தொழில் அமைச்சு யோசனை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: