News Just In

1/07/2024 05:44:00 AM

வாகன இறக்குமதியில் மீண்டும் ஏற்பட்டுள்ள சிக்கல்!




வாகன இறக்குமதி தொடர்பில் அண்மையில் வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,1000 சிசிக்கு குறைவான எஞ்சின் திறன் கொண்ட வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் ஒரு வருட கால அவகாசம் வழங்கியுள்ளது என்ற செய்தி பொய்யானது.

அத்துடன், குறைவான எஞ்சின் திறன் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் சங்கம் அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மையல்ல என்றும் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அண்மையில் 1000 சிசிக்கு குறைவான எஞ்சின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்ய தேவையான ஏற்பாடுகள் அடுத்த மாதத்திற்குள் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: