News Just In

1/22/2024 12:53:00 PM

3வது சர்வதேச முஸ்லிம் சாரணர் ஜம்போறி 2024.!





(எஸ்.அஷ்ரப்கான், ஏ.எம்.அஜாத்கான்)
3 வது சர்வதேச முஸ்லிம் சாரணர் ஜம்போறி 2024 ஆம் வருடம் ஜூன் 30 ம் திகதி தொடக்கம் ஜூலை 6ம் திகதிவரை அமெரிக்காவிலுள்ள ரெக்ஸாஸ் மாநிலத்தின் ஹவுஸ்டன் நகரில் பிரமாண்டமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதில் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச ஊடக மையத்தின் அங்கத்தவர்களுக்கான இணையவழி பாராட்டு நிகழ்வு கடந்த 13.01.2024 சனிக்கிழமை நடைபெற்றது.இம்மையத்தின் தலைவராக பங்களாதேஷைச் சேர்ந்த செய்யட் முஹம்மத் எஹ்திஸாம் நக்வி அவர்களும் கௌரவ விருந்தினர்களாக டாக்டர் ஆயில் அப்துல்மஜீட், பொப் வெடிக், பிரேய் பர்னிஸ் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இம்மையத்தில் சர்வதேச ரீதியாக மொத்தம் 37 பேர் அங்கத்தவர்களாக செயற்படுகின்றனர். இதில் இலங்கை சார்பாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் தேசிய உப தலைவர், ஒய்வு பெற்ற உணவு மருந்து பரிசோதகர் எஸ்.தஸ்தகீர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: