News Just In

12/30/2023 10:14:00 AM

உடலுக்கு மருந்தாகும் அன்னாசிப்பழம்.!



பொதுவாக உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் மருந்தாக காய்கறிகள், பழங்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றது.

இவ்வாறு அதிகப்படியான நோய்களுக்கு மருந்தாகும் பழங்களில் ஒன்று தான் அன்னாசிப்பழம்.

அன்னாச்சி பழத்தை வெட்டி உப்பு கலந்த தண்ணீரில் 5 நிமிடம் போட்டு அதன் பிறகு சாப்பிட்டால் ருசி அதிகரிக்கும்.

இந்த அன்னாச்சி பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால் காயங்கள் இருந்தால் உடனே ஆறும்.

அந்த வகையில், அன்னாசி பழம் வேறு என்னென்ன நோய்களுக்கு மருந்தாக செயற்படுகின்றது என்பதனை பார்க்கலாம்.

1. அன்னாச்சி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் மூளை கோளாறு மற்றும் ஞாபக சக்தி குறைவு போன்ற பிரச்சினைகள் குணமடையும்.

2. இந்த பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலிமையாக்கும்.

3. சிலருக்கு ஒற்றைத் தலைவலி அடிக்கடி வரும். இந்த பிரச்சினையிருப்பவர்கள் அன்னாச்சி பழம் சாப்பிட்டால் சரியாகும்.

4. தனியாக அன்னாசி பழத்தை சாப்பிடுவதை விட தேன் கலந்து சாப்பிடும் பொழுது பலன் இரட்டிப்பாக இருக்கும்.

5. பெண்களுக்கு வெள்ளைபடுதல், சிறுநீர் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் அன்னாச்சி பழத்தை தொடர்ச்சியாக மருந்துவ ஆலோசனையின் படி எடுத்து கொள்ளலாம்.

6. இதய நோய் மற்றும் மாரடைப்பு பிரச்சினை இருப்பவர்கள் அன்னாசி பழம் சாப்பிடலாம். இது இதய ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.

No comments: