News Just In

12/26/2023 09:00:00 AM

தென்னிலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள குற்றவாளி!





டுபாயில் இருந்து போதைப்பொருள் கடத்தலை நடத்தி வந்த பாதாளஉலக தலைவரான ஹரக் கட்டா எனப்படும் நந்துன் சிந்தக தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தென்னிலங்கை அரசியல்வாதி மற்றும் உயர் பொலிஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பை ஹரக் கட்டா பேணி வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் ஓய்வு பெற்ற மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு 2 கோடி ரூபாய் மற்றும் 4 கைத்துப்பாக்கிகளை பரிசாக ஹரக்கட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. உத்தியோகத்தர் சேவையில் இருக்கும் போதே இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஹரக் கட்டாவின் மாதாந்த சம்பளப் பட்டியலில் இந்த அதிகாரி மற்றும் பல பொலிஸ் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

ஹரக் கட்டாவிடமிருந்து 2 கோடி ரூபா மற்றும் 4 கைத்துப்பாக்கிகளைப் பெற்றதாகக் கூறப்படும் உயர் பொலிஸ் அதிகாரி, சில காலமாக போதைப்பொருள் தடுப்பு விசேட பிரிவின் பொறுப்பாளராக இருந்துள்ளார்.

ஹரக் கட்டாவுக்கு எதிரான விசாரணைகளின் போது, ​​இந்த அதிகாரி ஹரக் கட்டாவின் தரப்புக்கு இரகசிய விசாரணைகளின் தகவல்களை வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

ஹரக் கட்டாவுக்கு எதிரான சாட்சியங்களை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இரகசியமாக இயங்கிய அதிகாரிகளின் தகவல்கள் உட்பட ஹரக் கட்டாவுக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது

No comments: