
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான இரா. துரைரத்தினம் எழுதிய ‘கிழக்கில் சிவந்த சுவடுகள்’ தொகுப்பு நூல் வெளியீட்டுவிழா மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் கடந்த சனிக்கிழமை (04) நடைபெற்றது.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சிரேஷ்ட ஊடகவியலாளர் செல்லையா பேரின்பராசா தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வரவேற்புரையை ஊடகவியலாளர் சிவம் பாக்கியநாதன் ஆற்றினார்.
நூல் அறிமுகவுரையை முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன், நூல் நயவுரையை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கி.துரைராசசிங்கம் ஆற்றினர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பசீர் சேவுதாவூத்தின் செய்தியை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் வாசித்தார். சிறப்புரையை ஊடகவியலாளர் அ.நிக்ஷனும், ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் இரா. துரைரத்தினமும் நிகழ்த்தினர்.
முதற் பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனுக்கு நூலாசிரியர் வழங்கி வெளியிட்டு வைத்தார். இந்நிகழ்வில் அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார், முன்னாள் மாநகர முதல்வர் தி.சரவணபவன், மட்டக்களப்பு சிவில் சமூகத் தலைவர் எஸ்.மாமாங்கராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நூலின் அணிந்துரையை கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜெயசிங்கம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: