குபோடா DC-93G அறுவடை இயந்திரத்தை வெளியிடும் ஹேலிஸ்

கிளிநொச்சி மாவட்டம் எழுதுமட்டுவாழ் கிளாலியை சேர்ந்த தனது பெருமைமிகு வாடிக்கையாளரான மகேஸ்வரன் கபில்ராஜிடம் இயந்திரத்தை 2023 செப்டம்பர் 20 ஆம் திகதி நிறுவனம் கையளித்திருந்தது. இதன் மூலம், உற்பத்தித்திறன் மற்றும் செயற்றிறனில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், மற்றொரு மைல்கல்லை நிறுவனம் வடக்கில் பதித்துள்ளது.
தாழ் வயல்களுக்கு ஏற்ற வகையில் செயற்படும் குபோடா DC-93G இன் தன்மை, அதிக செயற்றிறனுக்கான அகலமான வெட்டை ஏற்படுத்துவதற்கான அகலம் மற்றும் சேற்று நிலங்களில் சிறந்த செயற்திறன் ஆகியவற்றை கொண்டு இருப்பதனால், இலங்கையின் வயல்களுக்கு சிறந்த அறுவடை இயந்திரமாக அமைகிறது. வயலின் நிலமைகளைப் பொறுத்து, இந்த அறுவடை இயந்திரம் உச்சபட்சமாக ஒரு நாளில் 15 ஏக்கருக்கு மேல் அறுவடை செய்யும் திறனை கொண்டது.
No comments: