News Just In

10/10/2023 10:41:00 AM

உலக உளநல தினத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் செயலமர்வு!

உலக உளநல தினத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் செயலமர்வு



நூருல் ஹுதா உமர்
2023.10.10 உலக உளநல தினமாகும். இத்தினத்தினை முன்னிட்டு கல்முனை பிராந்திய உளநல பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”உலக உளநல தினம் 2023” தொடர்பான செயலமர்வு இன்று (09) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல் அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித், பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

உளநலம் என்பது ஒரு உலகளாவிய மனித உரிமை ” எமது உள்ளம், எமது உரிமைகள்” எனும் தலைப்பில் கல்முனை பிராந்திய உளநலப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல் இதன்போது விரிவுரை நிகழ்த்தினார்.


No comments: