News Just In

9/05/2023 03:36:00 PM

சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பாக - சாணக்கியன் MP




சனல் 4 தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முடிவடையும் வரை பிள்ளையானையும்சுரேஸ் சாலேயையும் அவர்களின் பதவிகளில் இருந்து இடைநிறுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் நான்காவது வருட நிறைவின் போது நான் இது குறித்து தெரிவித்திருந்தேன் ஆனால் இலங்கை அரசாங்கம் இதனை கவனத்தில்கொள்ளவில்லை.

தற்போது இந்த விடயம் அம்பலமாகியுள்ளது விசாரணைகள் முடிவடையும் வரை பிள்ளையானையும் சுரேஸ் சாலேயையும் பதவிகளில் இருந்து இடைநிறுத்தும் நடவடிக்கைகளையாவது அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: