News Just In

8/26/2023 04:56:00 PM

தமிழ் கட்சிகளை பாராட்டினார் அமெரிக்க தூதுவர்!




13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் தழிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நகர்வு சரியானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் தமிழ் நாடாளமன்ற உறுப்பினர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) தலைவர் த. சித்தார்த்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவர் சீ. வீ. கே. சிவஞானம் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

அத்துடன் வடக்கின் காணி அபகரிப்பு, பௌத்த மத ஆக்கிரமிப்பு பற்றியும் குருந்தூர்மலையில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவின் செயற்பாடுகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

No comments: