திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் தற்போது நெற் செய்கை அறுவடை இடம் பெற்று வருகின்றன. இருந்த போதிலும் நெல்லுக்கான நிர்ணய விலை கிடைக்காமை, வெட்டுக் கூலி அதிகம் என பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த விவசாய பகுதிகளில் பட்டிமேடு சம்மாந்துரை விவசாய நிலப் பகுதியில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் செய்கை பண்ணப்பட்டு அறுவடை இடம் பெற்று வருகின்றன. கடந்த காலங்களை விடவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் தனியார் துறையினரே நெல்லை கொள்வனவு செய்து வருகின்றனர் போதுமான விலை இன்மை பாரிய செலவுகள் போக இலாபமின்மை நஷ்டமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு மூடை நெல்லானது 5000 ரூபாவாக செல்கிறது இது குறைவான விலையை காட்டுகிறது எனவே நிர்ணய விலையினை கொண்டு உரிய நெற் கொள்வனவுக்காக சாதகமான தீர்மானமொன்றை அரசாங்கம் விவசாயிகளுக்காக முன்வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments: