News Just In

8/14/2023 01:22:00 PM

இலங்கையில் வாகன விலை 70% குறையும் வாய்ப்பு..! செலவின்றி வாகன இறக்குமதி மேற்கொள்ள யோசனை!




இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அரசாங்கத்திடம் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே விடுத்துள்ள கோரிக்கையில் மேலும்,

ஜப்பானில் இருந்து வாகனங்களை கடன் அடிப்படையில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பில் இருந்து பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.

இவ்வாறு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வாகனங்களின் விலை தற்போதைய விலையை விட 70% குறையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments: