News Just In

7/08/2023 09:24:00 AM

நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் ஏற்பாட்டில் இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு!

நேற்று (07.07.2023) வெள்ளிக்கிழமை நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ரிக்காஷ் அவர்களின் தலைமையில் இடமாற்றம் பெற்றுச் செல்லும் வைத்தியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் பகல் போசன ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் கடமை புரிந்த வைத்தியர் எஸ்.எப் பஸ்னா பேகம் பொரளை ஆயுர்வேத போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்ல உள்ளார். மேலும் நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் கடமை புரிந்த வைத்தியர் எம்.ரிக்காஷ் பேத்தாளை ஆயுர்வேத மத்திய மருந்தகத்திற்கு இடம் மாற்றம் பெற்றுச் செல்கின்றார்.

பேத்தாளை ஆயுர்வேத மத்திய மருந்தகத்தில் கடமை புரிந்த வைத்தியர் எஸ். குமுதினி அவர்கள் யாழ்ப்பாணத்திற்கும் இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளனர். வைத்தியர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட சுதேச மருத்துவ திணைக்கள இணைப்பாளரும்,சித்த ஆயுர்வேத ஆதார வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு வைத்திய அத்தியட்சகருமான திருமதி. பாஷ்கரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் கடமை புரியும் வைத்தியர் எம்.நிம்ஷாத் , கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கடமை புரியும் வைத்தியர் எம்.முபாஷ், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே.சபீர் மற்றும் ஏனையோரும் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வினை நாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்.

No comments: