News Just In

7/14/2023 07:51:00 PM

அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புக்களின் கடுமையான கண்டனம்!



அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு எதிராக கடுமையான கண்டனம்
காத்தான்குடி கோட்ட கல்வி உத்தியோகஸ்தர் பதவி வெற்றிடத்துக்கு தகுதியுடைய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராகக் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் நஸீர் அஹமட்டுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

அதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு ஆதரவாகவும் கருத்து வெளியிட்டுள்ளன.


காத்தான்குடி கோட்ட கல்வி உத்தியோகஸ்தர் பதவி வெற்றிடம் காணப்பட்டிருந்த நிலையில், அப்பதவிக்கு SLES GRADE 3 தகுதியுடையவர்கள் காணப்படாமையால், தற்காலிக அதிகாரியாக SLPS GRADE 1 தகுதியுடையவரான M.M.கலாவுதீன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், SLES GRADE 3 படிப்பை நிறைவு செய்திருந்த A.G.மொஹமட் அக்கீம் என்பவருக்குக் கோட்ட கல்வி உத்தியோகத்தர் நியமனம் தற்போது கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டது.

அமைச்சர் நஸீர் அஹமட், தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த SLPS GRADE 1 தகுதியுடையவர் தொடர்ந்தும் இப்பதவியில் இருக்க வேண்டும் எனவும், SLES GRADE 3 நிறைவு செய்தவருக்குக் கோட்ட கல்வி உத்தியோகத்தர் நியமனம் வழங்கக் கூடாது என்றும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.

இதனையடுத்து, கல்வி அமைச்சின் செயலாளரால் இவ்விடயம் ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

ஆளுநர் செந்தில் தொண்டமான் கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் தகுதியுடையவர்களுக்கும் இந்த நியமனம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments: