News Just In

7/14/2023 05:15:00 PM

திடீரென உயர்ந்த டொலரின் பெறுமதி!

திடீரென உயர்ந்த டொலரின் பெறுமதி! 24 மணிநேரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா




நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(14.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (14.07.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 324.67 ரூபாவாகவும், கொள்வனவு விலை 310.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 249.34 ரூபாவாகவும், கொள்வனவு விலை 235.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
பவுண்ட் மற்றும் யூரோவின் பெறுமதி

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 366.06 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 347.62 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 427.31 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 406.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், இன்றையதினம் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.



No comments: