News Just In

7/16/2023 08:21:00 AM

இலங்கையில் உற்பத்தி செய்யப்படவுள்ள பெற்றோல்!

இலங்கையில் ஒக்டேன் 92, 95 வகைகளைச் சேர்ந்த பெற்றோல் உட்பட மசகு எண்ணெய் வசதிகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

சைனோ பெக் நிறுவனமும் இலங்கை முதலீட்டு சபையும் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த நிறுவனத்தி்ன் மேற்பார்வையுடன் எதிர்வரும் 20 வருடங்களுக்கு இலங்கையின் பெற்றோலிய உற்பத்தித்துறை தொடர்பான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

இதற்கான முதலீடு 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments: