
- ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகர சபைக்கு சொந்தமான காணியை கிழக்கு மாகாண தான்விரும்பியவாறு தனியாருக்கு வழங்க முடியாது எனவும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற்று மக்கள் பிரதிநிதிகளின் அனுமதியுடன்தான் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்தி மகஜர் ஒன்று எறாவூர் நகர சபையின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மூன்று அமைப்புக்கள் இணைந்து இந்த மகஜரை நகர சபைச் செயலாளர் எம்.எச்.எம். ஹமீமிடம் கையளித்துள்ளன.
ஜனநாயக மக்கள் கட்சித் தலைவர் கே. அப்துல் வாஜித் தலைமையில் ஸ்ரீலங்கா ஷெட் பௌண்டேஷன், நஜ்முல் உலூம் சன சமூக நிலையம் ஆகியவை இணைந்து இந்த மகஜரைக் கையளித்தள்ளன.
வியாழனன்று 27.07.2023 கையிளக்கப்பட்டுள்ள அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது.
ஏறாவூர் நகர சபைக்கு சொந்தமான காணியை தனியாருக்கு மாற்றுவதற்குரிய தங்களின் கள விஜயத்திற்கு அமைவாகவும், உள்ளுராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கமையவும் ஏறாவூர் நகர சபையின் செயலாளரினால் அண்மைக்காலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவது தொடர்பில் எமது சமூக அமைப்புக்கள் கவலையடைந்துள்ளன.
தற்போதய ஏறாவூர் நகர சபை 1920.03.12ம் திகதிய 7091ம் இலக்க அரச வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவான சனிட்டரி போட்டாக ஏறாவூர் நகர் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சனிட்டரி போட்டாக இருந்த காலப்பகுதியில் ஏறாவூர் நகர எல்லைக்குள் அகற்றப்படும் மலசலக்கழிவுகளை கொட்டுவதற்காக 1876ம் ஆண்டு காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் 1924.10.24ம் திகதி 7426ம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக ஒரு துண்டுக் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர் பட்டினசபையினால் சுவீகரிக்கப்பட்ட காணியில் 1979ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளியின் பிற்பாடு ஏறாவூர் நகரசபை ஊழியர்கள் தங்குவதற்காகவும், அவர்களதுக டமைகளைப் பாதுகாப்பதற்காகவும் 22ஒ12 அடி நீள அகலங்களை கொண்ட 10 அறைகள் ஒரே கூரையின் கீழ் அமைக்கப்பட்டது.
இதன் பின்னர் இக்காணியினுள் முறையான எவ்வித அனுமதியுமின்றி காலத்திற்கு காலம் பட்டின சபையில் கடமையாற்றிய சுகாதார ஊழியர்கள் அவ்விடுதியில் தங்கி வந்துள்ளனர் அவ்வாறு குடும்பத்துடன் தங்கியவர்களில் தற்போது இக்காணியினை தங்களுக்கு வழங்குமாறு வசிக்கின்ற தற்காலிக, நிரந்தர ஊழியர்கள் தங்ககளிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
இது குடியிருக்கும் வீடு அல்ல இது விடுதி மாத்திரமே. எனவே, இக்காணியினை பொதுத் தேவைக்காக பயன்படுத்தாமல் சுற்றறிக்கை இல.1979ஃ19 நிபந்தனைகளுக்கு முரணாக குடியேறிவர்களுக்கு உரித்துரிமை வழங்க நடவடிக்கை மேற்கொள்வது அரச சட்ட திட்டங்களுக்கு முரணாகும்.
மேலும் ஏறாவூர் நகர சபைப் பிரதேசம் மூவின மக்கள் இணைந்து வாழ்கின்ற ஒரு பகுதியாகும். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே மிக சன அடர்த்தி கூடியதும் காணிப் பற்றாக்குறை நிலவுகின்றதுமான ஒரு பிரதேசமாகும்.
எனவே, நகர சபைக்கு நிலையான சொத்தாக காணப்படும் விடுதியில் தங்கி இருப்பவர்களுக்கு மாற்றுக்காணியாக ஏற்கனவே சுவீகரிப்பு செய்யப்பட்டுள்ள PA பிஏ 1111 நில அளவை படத்தினை மீள் நில அளவை செய்து அந்தக் காணியின் விடுதியில் தங்கியுள்ளவர்களுக்கு மாற்று காணியாக வழங்குவற்கு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குமாறு தயவாய் கேட்டுக்கொள்கின்றோம்.
ஆளுநர் அவர்களே, இனங்களுக்கிடையில் அமைதி சீர்குலையாமல் உரையாடல் மற்றும் புரிந்துணர்வின் மூலம், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கக் கொள்கைகளை நிலைநிறுத்தி, அனைத்து குடிமக்களின் நலன்களையும் பாதுகாக்கும் மாற்றுத் தீர்வுகளைக் காண முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: