கம்பளை மாநகர சபைக்குட்பட்ட கல்கெடியாவ பாலம் 3 வருடங்களுக்கு மேலாகியும் புனரமைக்கப்படாமையால் மிகவும் அவலநிலைக்கு உள்ளாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வீதியானது கல்கெடியாவல, தெல்கொல்ல, தித்தெனிய, ரத்வத்த, கிரிந்த மற்றும் கல்கொஹோ உள்ளிட்ட கங்காத்தா வரை பயன்படுத்தப்படும் என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை ஏழெட்டு முறை கித்துல் மரம், மூங்கில் மரங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்தப் பாலத்தை கிராம மக்கள் தயார் செய்துள்ளதாகவும், ஆனால் மழையுடன் ஓடையில் தண்ணீர் பெருகியதால் மரப்பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதனால் கிராமங்களில் முச்சக்கரவண்டி கூட செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருவதுடன், பல சந்தர்ப்பங்களில் நோய்வாய்ப்பட்டவர்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்துள்ளனர்.
No comments: